மனித குலத்தை அச்சுறுத்திய எய்ட்ஸ் இன்னும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. உலக அளவில் மருத்துவர்களை அச்சுறுத்தி வரும் நோயில் முதன்மையானது இந்த எய்ட்ஸ். பால் வினை நோய் என்று சொல்லப்பட்டாலும் இந்த நோய்க்கு மட்டும் மருந்துகள் இல்லை என்றே சொல்லலாம்.
HIV (Human Immunodeficiency Virus) - மனித நோய் எதிர்ப்பை குறைக்கும் நச்சுயிரி என்பது மனித உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு அமைப்பை பாதிப்படையச் செய்து, நோய் தொற்றுக்களையும், நோய்களையும் எதிர்த்து போராடுகின்ற திறனை பலவீனப்படுத்துவதாகும்.
இந்த தொற்றை கண்டறிந்தாலும் இதற்கு சிகிச்சை இல்லை. இந்த தொற்று உண்டானவர்கள் வாழும் வரை ஆரோக்கியமாக வாழ சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகிறது. அதாவது நோய் தொற்றுகளை எதிர்த்து போராட முடியாத நிலையே எய்ட்ஸ் என்னும் கடைசி நிலை. வாழ்வின் இறுதி நிலை என்று சொல்லலாம்.
1. நமது உடலானது பிரமிப்பு மற்றும் ஆச்சரியம் நிறைந்தது. நாம் சுவாசிக்கின்ற, குடிக்கின்ற, சாப்பிடுகின்ற அல்லது தொடுகின்றவற்றில் இருக்கும் கிருமிகளிலிருந்து நோய்களை அடைவதில் இருந்து இது ஒவ்வொரு நாளும் மிகவும் சிறப்பான வழிகளில் காக்கின்றது.
2. HIV என்பது ஒரு கிருமி இது வைரஸ் எனப்படுகிறது (V என்பது VIRUS என்பதைக் குறிக்கிறது). இது குறிப்பாகவே மிகவும் அபாயகரமான வைரஸ் ஆகும், கிருமிகளிடமிருந்து நமது உடலைக் காக்கின்ற வேலையை இது தடுத்துவிடுகின்றது.
3. HIV அபாயகரமாவதைத் தடுக்கின்ற மருந்துகளைத்தான் அறிவியலாளர்கள் உருவாக்கியிருக்கிறார்கள் ஆனால் உடலில் இருந்து அதனை அறவே நீக்குவதற்கான ஒரு வழியை எவரும் கண்டுபிடிக்கவில்லை.
4. காலப்போக்கில் மருந்துகள் இல்லாமையால் HIV கொண்ட மக்களுக்கு எய்ட்ஸ் வியாதி உண்டாகிறது. எய்ட்ஸ் என்பது உடலை மேலும் மேலும் பலவீனமாக்குகின்ற தீவிரமான சுகவீனங்கள் கொண்ட ஒரு தொகுப்பாகும்.
5. HIV என்பது உடலுறவின்போது கண்ணுக்குத் தெரியாமல் உடலில் இருக்கும் ரத்தம் மற்றும் இதர திரவங்களில் உண்டாகி அங்கு வாழ்கிறது.
HIV என்பது இப்படி பரவுகிறது:
(i) உடலுறவின்போது
(ii) தொற்றிய தாயிடமிருந்து சிசுக்களுக்கு
(iii) ரத்தத்தில்.
6. உடலுறவில் இருந்து HIV தொற்றிவிடாமல் இருக்க மக்கள் கையாளும் வழிகள் (1) உடலுறவு கொள்ளாதிருத்தல், (2) உண்மையான உறவுமுறை கொள்ளுதல் அல்லது (3) ஆணுறைகளை உபயோகித்து உடலுறவு கொள்ளுதல் (பாதுகாப்பான உடலுறவு).
7. HIV மற்றும் எய்ட்ஸ் கொண்ட மக்களுடன் விளையாடலாம், உணவைப் பகிர்ந்துகொள்ளலாம், குடிக்கலாம், கை குலுக்கலாம் கட்டிப்பிடிக்கலாம். இப்படியான செயல்கள் பாதுகாப்பானவை மற்றும் வைரஸ் தொற்றுவதில்லை.
8. HIV மற்றும் எய்ட்ஸ் கொண்ட மக்கள் பயத்துடனும் சோகத்துடனும் இருப்பார்கள். எவர் ஒருவரையும்போலவே அவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தாருக்கும் அன்பும் அரவணைப்பும் தேவை. அவர்கள் தங்கள் கவலைகளைப் பற்றி பேசுவது அவசியம்.
9. அவர்கள் தங்களுக்குள்ளாக்வும் மற்றவர்களுக்கும் உதவுவதற்கு, தங்களுக்கு HIV அல்லது எய்ட்ஸ் இருப்பதாக நினைக்கும் மக்கள் மருத்துவகம் அல்லது மருத்துவமனைக்கு சோதனைக்காகவும் அல்லது ஆலோசனைக்காகவும் செல்வது அவசியம்.
10. பெரும்பாலான நாடுகளில், HIV கொண்டிருக்கும் மக்கள் உதவி மற்றும் சிகிச்சையைப் பெறுகின்றனர். ஆண்ட்டிரெட்ரோவைரல் சிகிச்சைமுறை எனப்படும் ஒரு மருந்து (ஏ ஆர் ட்டி) அவர்களை நீண்டகாலம் வாழவைக்க உதவுகிறது.
HIV மற்றும் எய்ட்ஸ் நோயைய பற்றி சந்தேகங்களுக்கு நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய இலவச அழைப்பு எண்கள்
1097
1800 419 1800
Counselling தொடர்பான செய்திகளை தினமும் உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள்.