இந்த lockdown காலத்தில் நிறைய பேர் வீடுகளில் முடங்கிப் போய்விட்டதாலேயே மொபைல் games களில் மூழ்கிவிடுகிறார்கள். game விளையாடிப் பணம் சம்பாதிக்கலாம் என்ற விளம்பரங்களின் மோகம் அதிகரித்து வருகிறது. இதனால் முன், பின் ஆன்லைன் game விளையாடாதவர்கள்கூட, பணம் சம்பாதிக்க நினைத்து அதில் வீழ்கின்றனர்.
இன்று நிறைய இளைஞர்களுக்கு ஆடம்பரங்களின் மீது ஒரு மோகமே இருக்கிறது. விளம்பரங்கள் காட்டும் bike, mobile, உணவகங்கள், உடைகள் எல்லாம் அவர்களைப் பொறுத்தவரை கிட்டத்தட்ட அத்தியாவசிமானவை என்று நினைக்கும் அளவு மனச்சலவை செய்யப்பட்டிருக்கிறார்கள். இதற்கு அவர்களது குடும்பப் பொருளாதாரச் சூழல் இடம் தராவிட்டால், எளிதுபோல் விரைவுபோல் தோன்றும் இவ்வகைச் game சூதாட்டங்களில் அவர்களது மனம் இயல்பாகவே நாட்டம் கொள்ளும்.
சூதாடத் தூண்டும் பல online games வந்துவிட்ட பின், இளைஞர்கள் மட்டுமல்லாது நடுத்தர வயதினரும் இதனால் கவரப்பட்டு, இதில் மூழ்கித் தன்னிலை இழப்பது இப்போது அதிகரித்து வருகிறது. இதன்மூலம் பணம் வருகிறதா என்று எனக்குத் தெரியாது. பணம் சம்பாதிக்கலாம் என்பது தீவிரமான ஒரு தூண்டுதல். விளையாட்டு, போட்டி என்பதையெல்லாம் மீறி இது அடிமையாகும் ஒரு பழக்கமாக (addiction) மாறுவதும் சாத்தியம். ஒரு போட்டி, அதில் வெற்றி பெற்றேயாக வேண்டும் என்பது ஆரம்பத்தில் ஆர்வமாகவும் வேட்கையாகவும் இருந்தாலும், அதுவே ஒரு வெறியாக மாறுவது சிலருக்கு நிகழும்.
Online சூதாடத் தூண்டும் விளையாட்டு நீங்கள் நினைப்பது போல மனிதர்களுக்குள் மட்டும் விளையாடும் விளையாட்டு அல்ல. Bot எனப்படும் அவர்களே program செய்து வெற்றி மட்டுமே பெறும் தன்மை கொண்ட மனிதர்கள் போல வெவ்வேறு பெயர்களால் வடிவமைக்கப்பட்ட போலிகள். நீங்கள் மனிதர்களுடன் விளையாடுவதாக நினைத்து பணத்தை இழந்து பின் வாழ்வை இழக்காதீர்கள். பணம் கட்டி விளையாடியதில் பணத்தை தொலைத்தவர்கள் தான் அதிகம்.
இதில் உள்நுழைந்துவிட்டு வெளிவர முடியாமல் தவிப்பவர்களுக்கு, எல்லா போதைப் பிடிகளிலிருந்தும் மீட்கும் அதே முறைகளைத்தான் பின்பற்ற வேண்டும். முதலில் கணினி மற்றும் செல்பேசியிலிருந்து அவர்களை விலக்க வேண்டும். இதன் விளைவாக எரிச்சல், கோபம், சோர்வு, படபடப்பு, பதற்றம் எல்லாமும் ஆரம்பத்தில் இருக்கும். அப்போது மிகவும் நிதானத்துடன், பொறுமையுடன் குடும்பமும் சுற்றமும் ஆதரவாக இருக்க வேண்டும். அவர்கள் படும் கஷ்டத்தைப் பார்த்து, 'பரவாயில்லை கொஞ்சமாக விளையாடிக்கொள்' எனும் சலுகைகள் கண்டிப்பாக உதவாது.
ஆரம்பத்தில் ஏற்படும் பதற்றமும் கோபமும், ஒரு சோர்வு நிலையில் போய் முடியும். அப்போது அவர்களுக்கு நேரத்தைச் செலவழிக்க மாற்று வழிகளைக் கைகாட்டி, அவற்றில் ஈடுபடவைக்க வேண்டும். இது ஒவ்வொருவருக்கும் அவரவர் ஆளுமை, ஆர்வம், திறன் ஆகியவற்றைப் பொறுத்து திட்டமிடப்பட வேண்டும். இதிலிருந்து மீண்டவர் மறுபடியும் ஆன்லைன் கேம்ஸ் போதையில் சிக்கிக்கொள்ளாதிருக்க, அவர்களைச் சில மாதங்களாவது கண்காணிக்க வேண்டும். அவர்களுக்கு சபலம் தோன்றும்போதெல்லாம், 'இது தவறு' என்பதைத் தொடர்ந்து வலியுறுத்திக்கொண்டிருக்க வேண்டும்.
கபடி, கொக்கோ, கண்ணாமூச்சி, திருடன் போலிஸ் என்று தெருவெங்கும் அங்கிங்கு ஓடியாடிய விளையாட்டுகளால் குழந்தைகளுக்கு பலனுண்டு. ஆனால் computer, மொபைல் போனில் விளையாடும் விளையாட்டுகள் ஆபத்தான விளையாட்டு! குழந்தைகளின் உடல் மற்றும் மன வளத்தை முற்றிலுமாக பாதிக்கும் விளையாட்டு.
பஸ், ரயில் பயணம் மற்றும் பயணத்திற்க்கு காத்திருக்கும் போது, படிக்க விருப்பம் இல்லாத போது, உறக்கம் வராத போது, போரடிக்கும் போது. நண்பர்களிடம் நானும் Mobile Games விளையாடுவேன் என்று பெருமை பேச, என பொழுதுபோக்குக்காக ஆரம்பித்த மொபைல்போன், கம்பியூட்டர் gamesகள் அந்த குழந்தைகளின் எதிர்காலத்தையே வீணாக்குகிறது.
இந்த gamesகளால் பிள்ளைகள் ஒரு வித அடம்பிடிக்கும், முரட்டு சுபாவத்துடன் வளர்கின்றனர். தனது அன்றாட வாழ்வில் உள்ள முக்கிய கடமைகளை விட்டு விலகுகிறார்கள். இதன் விளைவாக படிப்பில் கவனம் குறைகிறது. சமூக நடத்தையில் கூட நிறைய மாற்றங்கள் ஏற்படுகிறது. பிறருடன் கலந்து பேசாமல் எங்கும் தனித்திருத்தல், மாற்ற இயலாத சோம்பேறித்தனம், கீழ்ப்படியாமை, உடல் சுத்தம் பேணாதிருத்தல் என்று சங்கிலித் தொடர் போல வரும்.
திருடனை பிடிப்பது, மறைத்து வைத்திருக்கும் வெடிகுண்டுகளை கண்டறிவது, மந்திரவாதிகளை ஒரு கை பார்ப்பது. பெண்களை சீண்டுவது. போன்ற அனைத்து விளையாட்டுகளிலுமே, விளையாடும் குழந்தைகளே தன்னை ‘hero’ வாக எண்ணும் வகையில் உள்ளது. நாளடைவில் வன்முறையும், முரட்டுத்தனமும், பழிவாங்கும் உணர்வும் மேலோங்குகிறது. கரைய கரைய கல்லும் கரையும் தானே!
இந்த விளையாட்டுகளை விளையாடும்போது உடலுக்கோ, மனதுக்கோ எந்த சக்தியும் கிடைக்கப்போவதில்லை. மாறாக அடிமையாகும் எண்ணம்தான் அதில் அதிகம் வளருகிறது.
*வீட்டில் நிலவும் தனிமை, கட்டுப்பாடற்ற வாழ்க்கை சூழல், மிதமிஞ்சிய பணமும், பெற்றோர்களின் செல்லம்.
*குழந்தைகளை அடிமைப்படுத்தும் விதத்தில்தான் ஒவ்வொரு விளையாட்டும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
*வெற்றிபெற வேண்டும் என்ற வெறியை உருவாக்குகிறது.
தூக்கமின்மை
ஒற்றை தலைவலி
சோர்வு
கண் எரிச்சல்
பலகீனம்
செரிமான கோளாறுகள்
பள்ளி பாடங்களில் ஆர்வம் குறைதல்
கை, கால், முதுகு, கழுத்துவலி
மன அழுத்தம்
காரணமற்ற கோபம்
எரிச்சல்
தோற்றத்தில் அலட்சியம்
சுத்தமின்மை
விளையாடுவதற்காக பொய் சொல்லுதல்
பள்ளி நண்பர்களிடம் பிரச்சினைகளை ஏற்படுத்துதல்
பணத் தேவைக்காக திருடுதல்
திடீரென்று உடல் எடை அதிகரித்தல் அல்லது மெலிந்து போகுதல்
உணவு மீது விருப்பமின்மை.
உங்கள் குழந்தை இந்த விளையாட்டுக்கு அடிமையாகி இருந்தால் உடனே விளையாட்டில் இருந்து விடுபடச்செய்ய முயற்சிக்க வேண்டாம். படிப்படியாக விளையாடும் நேரத்தின் அளவை குறைத்துக்கொண்டே வாருங்கள்.
உங்கள் குழந்தைகள் தினமும் 1–2 மணி நேரத்துக்கு மேல் மொபைலில் கேம்ஸ் விளையாடினால் உடனே அதை கட்டுப்படுத்துங்கள். ஒரு மணி நேரத்துக்கு மேல் விளையாட அனுமதிக்காதீர்கள்.
மெதுவாக வேறு நல்ல பொழுதுபோக்குகளில் ஈடுபட ஏற்பாடு செய்யுங்கள். அந்த விளையாட்டில் இருந்து விடுபட்டால் park, beach, புத்தகம் சினிமாக்களுக்கு கூட்டி செல்வேன் என்று குழந்தைகளை ஊக்குவியுங்கள். மெல்ல மெல்ல குழந்தைக்கு இதன் தீமைகளை புரிய வையுங்கள்.
ஆன்லைன் விளையாட்டு பற்றிய மோசடிகள், பண இழப்பு பற்றியும் உங்களின் பிள்ளைகளிடம் விளக்குங்கள். டீன் ஏஜ் வயதினர் இது போன்ற விளையாட்டுகளில் இருந்து விடுபட, தங்களுக்கு பிடித்த வேறு செயல்களில் ஈடுபடலாம். உதாரணமாக, ஆன்லைன் கேம் விளையாடுவதற்கு முன்னர் நீங்கள் உடற்பயிற்சி, புத்தக வாசிப்பு, உடலுழைப்பு சார்ந்த விளையாட்டுகளில் கவனம் செலுத்தி இருப்பீர்கள். அதுபோன்றவற்றை நீங்கள் மீண்டும் தொடரலாம். இதன் மூலம் நீங்கள் உங்களின் மனதை ஆன்லைன் விளையாடுட்களில் இருந்து திசை திருப்ப முடியும்.
அதுமட்டுமின்றி, உறவினர்கள், நண்பர்களுடன் உங்களின் நேரத்தை பகிர்ந்து கொள்ளலாம். இதன் மூலம் நீங்கள் உங்களை ஆன்லைன் கேம்களில் இருந்து திசை திருப்ப முடியும்.
Counselling தொடர்பான செய்திகளை தினமும் உங்கள் மொபைலில் பெற Hi என type செய்து 93 42 80 71 51 என்ற எண்ணுக்கு WhatsApp செய்யவும். உங்களுக்கு தனிப்பட்ட முறையில் Counselling தேவைப்பட்டாலும் தொடர்பு கொள்ளுங்கள்.